Cover art is not available
Islamic eBook Library PDF
அந்த 7 பாவங்கள்
About this book
அந்த ஏழு பாவங்கள்
M.M. அப்துல் காதிர் உமரி,
வெளியிடு : ஃபுர்கான் பதிப்பகம்
1. இறைவனுக்கு இணைவைத்தல் 2. சூனியம் செய்தல் 3. நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்தல் 4. வட்டியை உண்ணுதல் 5. அநாதைகளின் சொத்தை விழுங்குதல் 6. போர் நடக்கும் தினத்தில் புறமுதுகு காட்டுதல் 7 ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்
பாவம்!
ஓர் உயிரினத்தைக் கொலை செய்தல் பாவம்.
ஓர் உயிரினத்தைக் கொடுமைப்படுத்துதல் பாவம்.
ஒருவன் மற்றொருவனுக்குத் தீங்கிழைத்தல் பாவம்.
உலகவாழ் மக்கள் பாவம் என்பதற்கு மேற்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றனர். பாவச்செயல் என்பதற்கு உலகிலுள்ள பெரும்பாலும் மற்ற மதங்கள் கொடுக்கும் விளக்கமும் இவ்வாறே உள்ளது.
ஒரு மனிதனுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ தீங்கிழைத்தல் பாவம் என்பதை மற்ற மதங்கள் கூறுவதை விட இஸ்லாம் மிகத்தெளிவாகவே கூறி இருக்கிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், நான் கேட்டதற்கு, "நல்ல ஒழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது உன்னுடைய மனம் அச்சுறுத்துவதும், மக்களிடம் அதை வெளியாக்குவதை நீ வெறுப்பதுமாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு ஸம்ஆன் (ரலி) நூல்: முஸ்லிம்
மேலும் இது மட்டுமே பாவம் என்று கூறிமுடித்துக் கொள்ளாமல், மனிதனுடைய அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மனிதனுடைய அறிவுக்குப் பொருந்தாத மூட நம்பிக்கைச் செயல்கள் அனைத்தையும் பாவம் என்றே இஸ்லாம் தீர்ப்பளிக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இறைவன் வெறுக்கின்ற அனைத்துச் செயல்களும் பாவம் என்பதே இஸ்லாமியத் தீர்வு.
உலகில் இருக்கும் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாத்தில் மூட நம்பிக்கை என்ற பேச்சிற்கே இடமில்லை!
Free PDF download · Opens from the listed source
← Back to the library