Skip to book details
Book cover placeholder for சிம்துஸ்ஸிப்யான் 248

Cover art is not available

Islamic eBook Library PDF

சிம்துஸ்ஸிப்யான் 248

  • PDF
  • 6.8 MB
  • Tamil
  • Added 25 Aug 2026
  • Source: Internet Archive

About this book

சிம்துஸ்ஸிப்யான்
இரட்டை முஸ்தான் வெளியீட்டகம் தஞ்சை முன்னுரை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனு மாகிய அல்லாஹ வினர் திருநாமத்தால் துவக்கம். அகிலத்திற்கோர் அருள் பிழம்பாய் அவதரித்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர்கள், தோழர்கள், இறைநேசர்கள், அனைவர் களின் மீதும் கருணையும் ஈடேற்றமும் உண்டாவதாக, தமிழ் கூறும் நல்உலகில் பழம்பெரும் ஆலிம்கள் அரபுத் தமிழ் எனும் மொழியை உருவாக்கி அதன் மூலம் மார்க்க சட்டங்களையும், இஸ்லாமிய ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். எத்தனையோ ஞான நூல்கள், தப்ளீர்கள் அரபுத் தமிழில் வெளிவந்துள்ளது. அரபுத் தமிழ் படிப்பதை இஸ்லாமிய மக்கள் கட்டாயமாக்கிக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமிய பெண்கள் கூட அரபுத் தமிழில் சரளமாக படிக்கவும், எழுதவும் கற்றிருந்தார்கள். இஸ்லாமிய ஆரம்ப பாடசாலையில் குர்ஆனை ஒதி முடித்ததற்கு பின்னால் பராயினில் முஃமினீன், சிம்துஸ் ஸிப்யான், அஹ்காமுல் ஹனபியா, நூர்நாமா போன்ற அரபுத்தமிழ் நூல்கள் வாசிப்பது நடைமுறையில் இருந்தது. இதனால் மக்கள் இஸ்லாமை மிகத் தெளிவான முறையில் அறிந்து வைத்திருந்தனர். வஹஹாபிகள் மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த இடம்பாடு இல்லாதிருந்தது. ஆனால் தற்காலத்தில் அரபுத் தமிழை உதாசீனப்படுத்தியதின் விளைவு மக்தப் மதரஸாக்களில் குர்ஆன் ஒதுவதோடு நின்றுபோனது. இதனால் இஸ்லாமிய சிறுவர்கள் அடிப்படை சட்டங்களைக்கூட தெளிவு பெறாத சூழலில் வஹற்ஹாபிகளின் பொய்யான விளக்கவுரைகளை நம்பி ஈமானை இழந்து வருவதை, இஸ்லாம் தன் தன்மானத்தை இழந்து வருவதை கண்கூடாக பார்க்கின்றோம். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அரபுத் தமிழை மீண்டும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிலை நிறுத்திட இஸ்லாமிய குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டி அரபு

இரட்டை முஸ்தான் வெளியீட்டகம்சிம்துஸ்ஸிப்யான்m.இப்னு முஹ்யித்தீன்தஞ்சை

Free PDF download · Opens from the listed source

← Back to the library