Skip to book details
Cover of அரபி கற்போர்க்கு அண்ணலாரின் அமுத மொழி ஆதாரங்கள்

Book cover

Islamic eBook Library PDF

அரபி கற்போர்க்கு அண்ணலாரின் அமுத மொழி ஆதாரங்கள்

  • PDF
  • 1.2 MB
  • Tamil
  • Added 25 Aug 2026
  • 1 download
  • Source: Internet Archive

About this book

(அரபி கற்போர்க்கு அண்ணலாரின் அமுத மொழி ஆதாரங்கள்)
அரபி மூலம் : முஹம்மது ஆஷிக் இலாஹில் பர்னி 
தமிழாக்கம் : மௌலவி N.முஹம்மது ஆஷிக் ஹமீதி ஃபாஜில்இஸ்லாஹி (BBA.,BA(Arabic).,MIS.,DFA., CFA.,ADCA)

மதிப்புரை
படைப்பினங்களை படைத்தாளும் பாசமிகு இறைவன் "மனித இனத்திற்கு எழுதுகோல் மூலம்(எழுதக்)கற்றுக் கொடுத்தான்” என்பது இறை மொழி. “ எழுது கோல் மீது சத்தியமாக ! (அதன் மூலம்)அவர்கள் எழுதுகிறவற்றின் மீதும் சத்தியமாக ! என்று இறைமறை பறைசாற்றுவதன் மூலம் எழுதுகோலின் ஏற்றம் மிக்க சிறப்பு என்றென்றும் எடுத்துரைக்கப்படுகிறது எனவே தான் "ஒரு ஆலிமின்(எழுதுகோலின்) மைத்துளி,சன் மார்க்கத் தியாகியின் உதிரத்துளியை விட மிகவும் உயர்ந்தது” என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இத்தகைய எழுதுகோலை ஏந்துபவர் கூறிய அறிவும், சீரிய சிந்தனையும்,சிறந்த ஒழுக்கம் உடையவராக இருப்பின் இவரின் எழுதுகோல் சமுதாயத்திற்கு நிழல் தரும் சந்தனமரமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை
இச்சிறப்புமிகு எழுதுகோலை தன் கரங்களில் ஏந்தி, சமுதாய மக்களுக்கு சன்மார்க்கத்தை எடுத்துரைக்க நாடி "அண்ணலாரின் அற்புத அமுத வாக்குகளை தேர்ந்தெடுத்து,மொழிபெயர்த்து, தன் முதல் முயற்சியை வெளிப்படுத்தியுள்ளார்,
எங்கள் "அல்ஜாமிஅத்துல் ஹமீதிய்யா” நாகூர் அரபிக்கல்லூரியில் 7 ஆண்டுகள் முழுமையாக கல்வி கற்று இவ்வாண்டு பட்டம் பெறும் மாணவர் திருப்பூர் மௌலவி ஆலிம்
N.முஹம்மது ஆஷிக் ஹமீதி ஃபாஜில் இஸ்லாஹி (BBA.,BA(Arabic).,MIS.,DFA., CFA.,ADCA)
இவர் மொழிபெயர்த்த“ப்ய் 35”அதாவது “அரபி கற்போர்க்கு அண்ணலாரின் அமுத மொழி ஆதாரங்கள்” என்ற இந்த நூல் அரபி இலக்கண சட்டங்களையும் உள்ளடக்கியது . அரபிக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவ,மாணவியருக்கு எளிதில் புரியும்

அரபி கற்போர்க்கு அண்ணலாரின் அமுத மொழி ஆதஅரபிகற்போர்க்குஅண்ணலாரின்அமுதமொழிஆதாரங்கள்

Free PDF download · Opens from the listed source

← Back to the library