Skip to book details
Book cover placeholder for நபித்தோழர்கள் தியாக வரலாறு

Cover art is not available

Islamic eBook Library PDF

நபித்தோழர்கள் தியாக வரலாறு

  • PDF
  • 2.1 MB
  • English
  • Added 27 Aug 2026
  • Source: Internet Archive

About this book

நபித்தோழர்கள் தியாக வரலாறு
எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
தாருஸ் ஸுன்னா பதிப்பகம்
நபித்தோழர்கள் தியாக வரலாறு
ஆசிரியர் S.H.M. இஸ்மாயில் ஸலபி B.A. (Hons)
வெளியீடு தாருஸ் ஸுன்னா பதிப்பகம்
நூல் விபரம்
நூலின் பெயர் : நபித்தோழர்கள் தியாக வரலாறு ஆசிரியர் : எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி பதிப்புரிமை : ஆசிரியருக்கு ISBN : 978-624-6698-00-3 வெளியீடு : தாருஸ் ஸுன்னா பதிப்பகம் வெளியீட்டு நாள் : 01 மார்ச் 2025 பக்கங்கள் : 210 பிரதிகள் : 2000 பக்க வடிவமைப்பு : எம்.எஸ்.எம். பைரூஸ் ஸலபி அச்சகம் : U2K Printers விலை : 700/-
முன்னுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்.
எல்லாப் புகழும், எத்துதியும் வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை அணுவணுவாகப் பின்பற்றிய நல்லறத் தோழர்கள், நபிகளாரின் உற்றார் உறவினர் மற்றும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!
கடந்த கால வரலாற்றை மறந்த சமுதாயம் நிகழ்காலத்தை நெறிப்படுத்தவோ, எதிர்காலத்தை ஒளிமயமாக்கவோ முடியாது. இந்த வகையில் வரலாறு முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக இஸ்லாத்தின் உயர்வையும், அந்தஸ்தையும் உரிய முறையில் அறிய வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதல் இன்றைய தினம் வரை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக தமது உதிரத்தையும், உயிரையும், உடல் உறுப்புக்களையும், உழைப்பையும் உரமாகப் பாய்ச்சியவர்களின் உயரிய வரலாற்றைத் தெரிந்திருப்பது அவசியமாகும்.
இஸ்லாத்தை வளர்ப்பதிலும், காப்பதிலும், கடைபிடிப்பதிலும் அவர்கள் காட்டிய தியாகம், உறுதி நமது ஈமானுக்கு புத்துணர்ச்சியைய

நபித்தோழர்கள் தியாக வரலாறுநபித்தோழர்கள்தியாகவரலாறு

Free PDF download · Opens from the listed source

← Back to the library