Cover art is not available
Islamic eBook Library PDF
உஸ்மான் ரலி
About this book
ஆசிரியர் உரை
அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால்,
பொருவிலாப் புகழுடையார் பெருமானார் நபி முஹம் மது (ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம்) அவர்களின் கலீஃபாக்களில் மூன்றாமவரான ஸையிதினா உதுமான்-கணிதன்னுாரைன் (ரழ்லியல்லாஹ" அன்ஹா) அவர்களின் புனித வரலாறு மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.
முந்திய இரு கலீஃபாக்களின் வீரச் சாதனைகளைக் கண்டு வியந்தவர்களின் கரங்களேற்கும் ஒரு கண்ணீர்க் காவியமே இது!
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பொற்காலமெனப் போற்றத்தக்க சமயத்தே அதன் பொறுப்பேற்ற கலீஃபா அவர்களின் முடிவை பரிதாபகரமானதாகவே நாம் காண நேரிடுகிறது.
முஸ்லிம்களுக்கிடையே மாச்சரியம் விளைவிக்கப்பட் டுப் பறிக்கப்பட்ட முதல் உயிர் கலீஃபா உதுமான் (ரலி) அவர்களுடையது. அது அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்ட ஒன்றே.
உதுமான்-கனி-துன்னுாரைன் (ரலி) அவர்கள், தங்களின் மரணம் கொலையின் மூலமே என்பதை முன்னறிந்தே யிருந்தார்கள்.
அவர்களின் சங்கையைப் பறிக்க ஒரு கூட்டம் பாயும் என அவர்கள் முன்னறிவிக்கப்பட்டேயிருந்தார்கள்.
எனினும் அரசியல் நடத்த அமர்ந்த அவ்வாத்ம ஞானி தமக்கென விதிக்கப் பெற்ற அம்முடிவை ஏற்க, தாம்
வெளிப்படுத்திய அழகிய பொறுமையால் நம் கண்களைக் குளமாக்கிச் சங்கமிக்கச் செய்கிறார்கள்.
காலச் சக்கரம் பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்து உருண்ட வண்ணமேயுள்ளது. கொல்லப்பட்ட கலிஃபாவின் உயிருக்கு விலை தேட உருவப்பட்ட வாள் இன்னும் தன் உறையினுள் புகவில்லை. அமைதியும் ஆரோக்கியமும் நிறைந்த முந்திய கால கட்டத்தை உலகம் இன்னமும் எட்டியும் பார்க்கவே முடியவில்லை. நாயகத்தின் கலீஃபாவின் உயிரின் புனிதத்தைப் புரியவைக்க இந்த நிலையே போதும்.
முந்திய பதிப்புகளை முழுமையாகப் படித்தவர்கள் வெளிப்படுத்திய அவர்களின் உள்ளுணர்வுகளே நாயகத்தின் கலீஃபாக்களின் வரலாறு
Free PDF download · Opens from the listed source
← Back to the library