Skip to book details
Book cover placeholder for மூன்று அடிப்படைகள்

Cover art is not available

Islamic eBook Library PDF

மூன்று அடிப்படைகள்

  • PDF
  • 2.1 MB
  • English
  • Added 25 Aug 2026
  • Source: Internet Archive

About this book

الأصول الثلاثة  
மூன்று அடிப்படைகள்
ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் அறிந்து, நம்பிக்கை கொண்டு, வாழ்வில் பின்பற்றவேண்டிய மூன்று அடிப்படைகளை குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் தெளிவுபடுத்தும் நூல்.
ஆசிரியர்: இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (ஹிஜ்ரி 1115-1206) தமிழில்: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம்

பொருளடக்கம்
‌ஆசிரியர் அறிமுகம்  ‌பதிப்புரை  ‌தாருல் ஹுதா ஓர் அறிமுகம்  ‌வெற்றிக்குரிய நான்கு அம்சங்கள்  ‌அறிந்து செயல்படுத்த வேண்டிய மூன்று விசயங்கள்  ‌நபி இப்றாஹீம் உடைய மார்க்கம்  ‌மூன்று அடிப்படைகள்  ‌முதல் அடிப்படை  ‌ரப்பு  ‌வணக்க வழிபாடுகள்  ‌இரண்டாம் அடிப்படை  ‌ஈமான்  ‌இஹ்சான்  ‌மூன்றாவது அடிப்படை ‌நபி மதீனாவில்  ‌இறைத்தூதர்கள் 
ஆசிரியர் அறிமுகம்
இமாம் அவர்களின் பெயர் ஷைகுல் இஸ்லாம் முஹம்மது ப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு சுலைமான் இப்னு அலீ இப்னு முஹம்மது இப்னு அஹ்மது இப்னு ராஷிது இப்னு பரீது இப்னு முஹம்மது முஷ்ரிஃப் இப்னு உமர். இவர் தமீம் வமிசத்தைச் சேர்ந்தவர்.
நஜ்து மாகாணத்தில் உயைனா எனும் ஊரில் ஹிஜ்ரீ 1115 ஆம் ஆண்டு பிறந்தார்.
பத்து வயதை அடைவதற்கு முன்பே குர்ஆனை மனனம் செய்து, பின்னர் மார்க்கக் கல்விகளைத் திறம்படக் கற்றார்.
ஹிஜ்ரீ 1153 ஆம் ஆண்டிலிருந்து பகிரங்கமாக ஏகத்துவ அழைப்பை விடுத்தார். அனாசாரங்களையும் கப்ரு வழிபாடுகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.
இவரின் முயற்சிக்கு அல்லாஹ் வெற்றியை வழங்கினான். கப்ருகளை வணங்கிவந்த பலர், வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மைப்படுத்தினார்கள். அனாசாரங்களை விட்டு நபிவழிக்குத் திரும்பினார்கள்.
இமாம் அவர்கள் தங்களின் வாழ்க்கையை முழுமையாக மார்க்கப் பணிக்கே அர்ப்பணித்தார்கள். பல எதிர்ப்புகள

மூன்று அடிப்படைகள்இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹஉமர் ஷரீஃப் இப்னு அப்துஸ்ஸலாம்மூன்றுஅடிப்படைகள்

Free PDF download · Opens from the listed source

← Back to the library