Book cover
Islamic eBook Library PDF
இஸ்லாத்தின் அடிப்படை - ஸாலிஹ் அல் உஸைமின்
About this book
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஒரு விளக்கம்
தொகுப்பு: முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் தமிழில்: மௌலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாகவி, உமரி (அபூ ஹாலித்)
வெளியீடு: பிரசுரிப்பு, அறிவியல் ஆய்வுத் திணைக்களம் இஸ்லாமிய அழைப்பு வழி காட்டல், வக்பு, அலுவல்கள் அமைச்சு 1435 H ஹிஜ்ரி
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم முன்னுரை
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள், மற்றும் அவர்க ளைப் பின் தொடர்ந்தோர் அனைவர் மீதும் ஸலவாத்தும், ஸலாமும் உண்டாவதாக. தௌஹீத் ஏகத்துவக் கல்வி கல்விகளிலே சிறந்தது. உயர் அந்தஸ்துடையது: அதைத் தேடிப் பெறுவது நம்மீது கடமையாகும்! ஏனெ னில் அது, அல்லாஹ்வையும் அவனுடைய பெயர்கள்- தன்மைகளையும் அவனுடைய அடி யார்கள் அவனுக்கு செலுத்த வெண்டிய கடமை களையும் பற்றிய அறிவாகும். அது மட்டுமல்ல, அல்லாஹ்விடம் கொண்டு சேர்க்கும் பாதையின் திறவு கோலாகவும் அவனுடைய ஷரீஅத் சட்ட ங்களுக்கு அடித்தளமாகவும் அது திகழ்கிறது. இதனால்தான் இறைத் தூதர்கள் அனைவரும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِىٓ إِلَيْهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدُونِ
"உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும் நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்றே வஹியின் மூலம் நாம் அறிவித்திருந்தோம்" (21:25)
மேலும் ஓரிடத்தில் இறைவன் ஏதத்துவத்தைக் கொண்டு தனக்குத்தானே சாட்சியம் அளித்துள் ளான். அதைக் கொண்டு அவனுடைய மலக்கு களும் (வானவர்களும்) ஞானமுடையவர்களும் சாட்சியம் அளித்துள்ளார்கள்:-
'வணக்கத்திற்குரிய இறைவன்
Free PDF download · Opens from the listed source
← Back to the library