Cover art is not available
Islamic eBook Library PDF
பெண்ணரசிகள் பற்றி பொன்மறை குர்ஆன்
About this book
பெண்ணரசிகள் பற்றி பொன்மறை குர்ஆன்
H. ஹாஜா முஹியித்தீன் சிராஜி
ஆசிரியர் உரை
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அகிலத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து உணவளித்து, இரட்சித்து பாதுகாத்து பரிபாலித்து வரக்கூடிய எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவுக்கே உரித்தானது.
அவனின் வற்றாத கருணையும், ஈடு இணை இல்லாத ஈடேற்றமும் மனிதப் புனிதர் ஈருலக நாதர்; அண்ணல் எங்கள் கோமான்; அரபுலகின் பூமான் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள், இறைநேசச் செல்வர்கள் அவர்களைப் பின்பற்றி வாழ்கின்ற அனைத்து நல்லடியார்கள் மீதும் என்றென்றும் சொரிந்து கொண்டே இருக்கட்டுமாக ஆமீன்!
திருக்குர்ஆன் கூறிக் காட்டும் சுமார் 15 பெண்களைப் பற்றி எழுத ஆவல் கொண்டேன். இதில் அவர்களின் வரலாறு முழுவதும் குறிப்பிடப்படவில்லை. அவர்களைப் பற்றி திருமறையில் எப்படி கூறப்பட்டுள்ளதோ அதையும்; அதன் விளக்கத்தையும், அதை ஒட்டிய வரலாற்றையும், அதன் மூலம் 'நமக்கு என்ன படிப்பினை என்பதையும் இங்கு விளக்கப்படுகிறது.
ஆகவே அதை தெரிந்து அதன்படி நாமும் நம் வாழ்வை சரிசெய்து கொள்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக! இச்சிறு நூல் வெளிவர காரணமாக இருந்த அனைத்து பெரியார்களுக்கும் ஈருல நற்பயனை அல்லாஹ் பூரணமாக வழங்குவானாக! ஆமீன்!
Free PDF download · Opens from the listed source
← Back to the library