Skip to book details
Book cover placeholder for வரலாறு படைத்த மிஃராஜ்

Cover art is not available

Islamic eBook Library PDF

வரலாறு படைத்த மிஃராஜ்

  • PDF
  • 6.8 MB
  • Tamil
  • Added 29 Aug 2026
  • 1 download
  • Source: Internet Archive

About this book

வரலாறு படைத்த மிஃராஜ்
வெளியீடு :தாருல் இல்ம் இஸ்லாமிக் சென்டர்
இராஜபாளையம்.
visit islamkalvi.com
நூலின் உள்ளே
மிஃராஜ் இரவு வரலாற்றுச் சுருக்கம்
நபிகளார் நரகில் கண்ட வேதனைகள் மிஃராஜ் கற்றுத் தரும் பாடங்கள் ரஜப் 27ல் தான் மிஃராஜ் நடந்ததா? நபியவர்கள் அல்லாஹ்வை நேரில் பார்த்தார்களா? தஸ்பிஹ் நஃபில், சிறப்பு நோன்பு, ராத்திபு பித்அத் குறித்து எச்சரிக்கை சான்றோர்களை விட சிறந்தவர்களா நாம்?
visit islamkalvi.com
வரலாறு படைத்த மிஃராஜ்
ஏன் இந்த சிற்றேடு?
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் அருளும் சாந்தியும் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது பாசமிக்க குடும்பத்தார்கள், தோழர்கள், தோழியர்கள் மீதும் இன்னும் எல்லா முஃமினான முஸ்லிமான ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
அன்பிற்குரியவர்களே! புனிதமிக்க இந்த ரஜப் மாதத்திலே உங்களை வந்தடைந்திருக்கிறது இந்த சிற்றேடு. இதன் நோக்கம், நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் தனது அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக ஏற்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க மிஃராஜ் (விண்ணுலகப்பயணம்) பற்றிய ஆதாரப்பூர்வமான வரலாற்றை சொல்வதற்குத்தான்.
மேலும் மிஃராஜ் சம்பவத்திலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகளையும், மிஃராஜ் தொடர்பாக இட்டுக்கட்டப்பட்ட பலஹீனமான ஆதாரங்களின் அடிப்படையில் மக்களிடையே காணப்படும் சில தவறான நம்பிக்கைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி அதை களைவதும் தான் இச்சிற்றேட்டின் நோக்கம்.
நாம் இருக்கக்கூடிய புனிதமிக்க இந்த ரஜப் மாதம் பிறை 27 ல்தான் மிஃராஜ் பயணம் நடைபெற்றது என நினைத்து அந்த நாளில் எல்லா ஊர்களிலும் பெரும்பாலான பள்ளிகளில் சிறப்பு வணக்க வழிபாடுகள் நடைபெற்று வருவதை வருடாவருடம் நாம் பார்த்து

வரலாறு படைத்த மிஃராஜ்வரலாறுபடைத்தமிஃராஜ்

Free PDF download · Opens from the listed source

← Back to the library